டில்லி

யங்கர வாத செயல்களைப் பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே இந்தியா இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

 =இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை 2023, முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. பிசிசிஐ, இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததையடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெற்றன.

இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டியில் கடைசியாக 2012 – 2013ல் விளையாடியது. பிறகு, இரு நாடுகளும் ஐசிசி உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் ’எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது” என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இது குறித்து,

நீண்ட காலத்துக்கு முன்பே பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ முடிவு செய்தது. எனவே எல்லையில் தாக்குதல் நடத்துவதையோ அல்லது ஊடுருவல் சம்பவங்களையோ நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் தொடங்க மாட்டோம்” 

என்று தெரிவித்தார் .