தமிழக அரசின் கடற்கரை ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Must read

சென்னை

மிழக அரசு அளித்த கடற்கரைப்பகுதி ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று பல பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பேரிட ர் நேரத்தில் பல துயரங்கள் உண்டாகின்றன. மற்றும் வானிலை மாற்றம், கடல் மட்டம் யர்வு ஆகியவற்றை கவனிக்காமல் எழுப்பப்படும் இந்த கட்டிடங்கள் பலவும் அனுமதி பெறாமல் எழுப்பப் பட்டவை ஆகும்.

இதை தடுக்க தமிழக அரசு ஒரு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டது. அதை ஒட்டி கடந்த வருடம் ஜூலை மாதம் இதற்கான வரைவு திட்டத்தை தேசிய கடற்கரை மேலாண்மை மையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது. இந்த திட்டம் குறித்த கருத்துக்களைக் கூற இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மையம் 60 நாட்கள் கால அவகாசம் அளித்தது. கடந்த வெள்ளி அன்று அரசின் இந்த திட்டத்தை பரிசீலித்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தென் இந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி, “மீனவர்கள் எந்த ஒரு வசதியையும் கரையில் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் குழுவினர் எண்ணூரில் இருந்து அக்கரை வரை சுமார் 800 கட்டிடங்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

அவற்றை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளிடம் புகார் அளித்தும் அவை அகற்றப்படவில்லை. இந்த புதிய அறிவிப்பின் மூலம் அத்தகைய கட்டிடங்கள் இனி அனுமதி பெற வாய்ப்பு ஏற்படலாம். மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை கடற்கரையில்வைக்க தடை ஏற்படும் என அஞ்சப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article