ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

Must read

டில்லி

காஷ்மீர் மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது

காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.  மேலும் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆக இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் லடாக் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் நடைபெறவில்லை.  அங்கு தேர்தல் நடந்து ஆட்சி அமைக்கப்படவில்லை.  ஆகவே துணை நிலை ஆளுநரே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தற்போது பிரதமர் மோடி உடன் காஷ்மீர் தலைவர்கள் ஒரு சந்திப்பை நிகழ்த்தினர்.  இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

More articles

Latest article