காவிரி விவகாரத்தில் தொய்வில்லை!: சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

Must read

மதுரை:
காவிரி மேலான்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவிர்ப்பதால், காவிரி விவகாரத்தில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழக உள்ளாட்சி தேர்தல் மாற்றி dஅமைக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வேட்பாளர்கள் பல நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் உள்ளாட்சி தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்யும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில். பா.ஜ.க விற்க்கு மிக பெரிய வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரும்பாதது குறித்த  கேள்விக்கு. “இதனால் காவிரி விவகாரத்தில் எவ்வித தொய்வும் ஏற்ப்பட வாய்ப்வில்லை” என்றார்.

More articles

Latest article