சென்னை

நீலகிரி மாவடத்தில் உலவும் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

எனவே புலியை பிடிக்க முடியாவிட்டால், சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது. அங்கு அதிரடிப் படையினருடன் நுழைந்த வனத்துறையினர் புலியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா வைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு மனுவில், மசினகுடி பகுதியில் சுற்றித்திரியும் புலியைச் சுட்டுக்கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளார். அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை எனத் தெரிவித்துள்ள அவர், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப் பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.