சென்னை

ன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100க்கும் அதிகமானது.

இதையொட்டி தமிழக அரசு விதிக்கும் வரியில் ரு.3 குறைப்பு செய்யப்பட்டது.  அதன்  பிறகு விலையில் உயர்வு இன்றி காணப்பட்டது.  தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.  இதையொட்டி கடந்த ஓரிரு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளன.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்துள்ளது.  இதையொட்டி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.01 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன் டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளது.  இன்று சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.31 ஆகி உள்ளது.