தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

Must read

விருதுநகர்: 
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம் வாங்குபவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த  செய்திக் குறிப்பில்,  தடுப்பூசி செலுத்தாதோருக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article