சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் போட்.

முழுக்க முழுக்க கடலில் நடப்பது போல் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தப் படத்திற்காக பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் ஒரு கானா பாடலை (ஃபியூஷன்) பாடியுள்ளார்.

ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் குறித்து சிம்புதேவன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என ஹிட் படங்களை இயக்கிய சிம்புதேவனின் போட் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்படி ஏற்படுத்தியுள்ளது.