விக்ரம், பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்து 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்.

இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ஊக்கப்படுத்தும் விதமாக பெரிய தொகைக்கு செக் ஒன்றும் பி.எம்.டபுள்யூ காரையும் பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

அதேபோல் இயக்குனர் நெல்சனுக்கும் ஊக்கத்தொகையும் போர்ஷே கார் ஒன்றையும் பரிசளித்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு போர்ஷே கார் ஒன்றை பரிசளித்துள்ளார் கலாநிதி மாறன்.

அதற்காக 3 போர்ஷே கார்களை அனிருத் முன் கொண்டுவந்து நிறுத்தி அதில் அவர் விரும்பியதை தேர்ந்தெடுக்கச் செய்தார்.

இதற்கு முன் திரைத்துறையில் இதுபோன்ற பரிசுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்று படத்துக்குப் படம் பரிசளிப்பு என்பது கலைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ராஜ்கமல் நிறுவனம் சார்பிலும் மாமன்னன் படத்திற்காக ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் இயக்குனர் மார் செல்வராஜுக்கு கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.