சென்னை

பிரபல திரைப்பட நடிகர் ஆர் எஸ் சிவாஜியின் மரணத்துக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல திரைப்பட நடிகர் ஆர் எஸ் சிவாஜி புகழ் பெற்ற இயக்குநர் மற்றும் நடிகரான சந்தான பாரதியின் சகோதரர் ஆவார்.  இவர் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஆவார்.

இன்று காலை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம் அடைந்தார்.. ஆர் எஸ்  சிவாஜிக்கு வயது 66 ஆகும்.. இவர் 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார்.

ஆர் எஸ் சிவாஜி பொதுவாக கமலஹாசனின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் எனக் கூறப்பட்டாலும் அவர் மற்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.  இவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திரை உலகினர் பலரும் ஆர்.எஸ்.சிவாஜி மறைவுக்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.