டில்லி

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு ரேஷன் பொருட்களை கடைகளுக்கு அனூப்பியதில்  முறைகேடு நிகழ்த்தியுள்ளதாக கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய கணக்கு தணிக்கைக் குழு டில்லி அரசின் செயல்பாடுகளைக் குறித்து தணிக்கை செய்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.   அந்த அறிக்கையில் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளில் பல குறைகளை தெரிவித்துள்ளது.   அதில் முதன்மையாக அரசு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்தி உள்ளது.

அந்த அறிக்கையில் “டில்லியில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டுக் கழக கிடங்கில் இருந்து மாநிலம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு அனுபி உள்ளது.   இந்த விவரங்களை ஆய்ந்ததில் 1589 டன் உணவு தானியம் அனுப்பப் பட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளது.   இவ்வாறு அனுப்பப் பட்டதாக கூறப்படும் விவரங்களில் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ ரிக்‌ஷாக்கள்)  ஆகியவற்றின் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ள எட்டு வாகனங்களில் இவ்வளவு எடையுள்ள உணவு தானியங்கள் அனுப்ப சிறிதும் வாய்ப்பில்லை.   இதனால் இந்த தானியங்கள் கடைகளுக்கு அனுப்பப் படாமலே கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என தணிக்கை நிறுவனம் கருதுகிறது.

அத்துடன் கடந்த 2016-17 ஆம் வருடம் தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் 207 வாகனங்களின் எண்கள் டில்லி எண்களை கொண்டுள்ளன.   ஆனால் டில்லியில் பதிவு செய்யப்படவில்லை.   அந்த எண்களில் 10 வாகனங்கள் அரசு வாகனங்கள் ஆகும்.” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக இது குறித்து கடும் விமர்சனங்களை கூறி உள்ளது.  டில்லையை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், ”கெஜ்ரிவால் எப்போதும் கொள்கையப் பற்றி முழங்குவார்.   ஆனால் அவருடைய முகத்தின் முன்பு இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது.   இதற்கு என்ன கூறுவார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.