ஐதராபாத் கோதாபெட் பழச்சந்தை

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள  கோதாபெட் பழச்சந்தையில், மாங்காய்கள் பழுக்க வைத்திருந்த ரசாயண பொருட்கள் மாநில உணவுத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.

சீசனுக்கு ஏற்ப பழங்களை பழுக்க வைக்க ரசாயணப் பொருட்களை வணிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள் இதுபோன்ற ரசாயண பொருட்களால் பாதுகாக்கப்படுவதால், புதுப்புது வகையான நோய்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளால், தெலுங்கான மாநிலத்தின் மிகப்பெரிய பழச்சந்தை யான ஐதராபாத்தில் உள்ள  கோதாபட் பழச்சந்தையில், மாநில மாநில உணவு ஆய்வக அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது,  மாங்காய்களை பழுக்க வைக்க, கார்டினோஜெனிக் என்ற வேதிப்பொருளுடன், எத்திலீன் பவுடர் கலந்த கலவையை பாக்கெட்டுகளில் அடைத்து, மாங்காய்களுக்கு இடையே வைத்து, செயற்கை முறையில் பழங்கள் பழுக்க பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

ஒவ்வொரு பெட்டியில் உள்ள மாங்காய்கள் இடையே எத்திலின் பவுடர் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளை வணிகர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து, அந்த மாங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

ஐதராபாத் கோதாபெட் பழச்சந்தை

மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ரசாயணப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரசாயண பவுர்களை பயன்படுத்திய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் உணவு நிர்வாகம் (தெலுங்கானா) இயக்குனர் கே.சங்கர் கூறும்போது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், ரசாயணங்களை பயன்படுத்துவது  சட்ட விரோதம் என்றும், எத்திலீன் மட்டுமே வாயுக்களாக பயன்படுத்தலாம் என்ற அவர் அதை பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

மேலும், இந்த சோதனையின்போது சுமார் 4 லட்சம் அளவிலான ரசாயண பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த பவுடர் தடை செய்யப்பட்ட பவுடர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு இதுபோன்று ரசாயண பவுடர் பயன்படுத்தியதாக கோதாபெட் பழச்சந்தையில் உள்ள 91 கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ரசாயணம் தொடர்பாக அந்த கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு ஆந்திர ஐகோர்ட்டு, பழங்கள் ரசாயண முறையில் பழுக்க வைக்கப்படுவது, பயங்கரவாதத்தை விட மோசமானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.