பெங்களூரு:
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாளை, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று கர்நாடக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக போக்குவரத்துதுறை தெரிவித்து உள்ளது.