பிரபல பாலிவுட் நடிகையும், 2006ம் ஆண்டு மிஸ் இந்தியாவுமான நடிகை நடாஷா சூரி, இந்தோனேஷியாவில் பங்கி ஜம்ப் விளையாட்டின்போது விபத்துக்குள்ளானார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடநிலைகவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து  தெரியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல இந்திய நடிகையான நடாஷா விளம்பர படங்கள், மாடலிங் துறையிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். பல டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பங்கி ஜம்ப் விளையாட்டு (மாதிரி படம்)

இந்நிலையில், இந்தோனேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அங்கு சென்ற நடாஷா, அதோடு இந்தோனேஷியாவையும் சுற்றிப்பார்க்க கிளம்பினார்.

அப்போது, இந்தோனேஷியாவின் பிரபலமான பங்கி ஜம்பிக் விளையாடி எண்ணினார். இந்த விளையாட்டானது, விளையாடும் நபரின் உடலில் பாதுகாப்பு உபகரணங்களுடன்  கயிறு கட்டப்பட்டு,  உயரமான மலையின்  உச்சியிலிருந்து  ஆற்றில் குதிக்கும் சாகச நிகழ்ச்சி.

இந்த விளையாட்டை விளையாட விரும்பிய நடாஷா, விளையாட்டில் பங்கேற்று ஆற்றில் குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து ஆற்றுக்குள் தலைகீழாக விழுந்தார்.

அவரை உடனடியாக மீட்க பாதுகாப்பு படையினர், அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் அடிபட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்திற்கு பிறகே தெரியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.