சென்னை:

மிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூட இருப்பதாக தலைமை செயலக வட்டார  தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 8ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டு 5 நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் வகையில்,  அதுகுறித்து நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பட்ஜெட், மானியக் கோரிக்கை கள், புதிய அறிவிப்புகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேவேளையில், எடப்பாடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 1 ஒருடம் முடிவடைய உள்ள நிலையில், அதுகுறித்தும் விவாதிக்கப்படும் என கோட்டை வட்டார தகவலகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மறைந்த தமிழக முதல்வர் முழு உருவப்படம் தமிழக சட்டசபையில் திறந்த வைக்கப்பட்டபோது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.