மார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்!

Must read

1cancer-student
தற்காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்கி வருகிறது.
மார்பக புற்றுநோய்க்கு புதிய வகையான சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் தமிழக வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த  கிர்தின் நித்தியானந்தம்.
மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் தான். இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை டமோக்சி பென் என்ற மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால்  வளர்ச்சியை தடுக்க முடியுமே தவிர, புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
இந்நிலையில் இதற்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
இதுகுறித்து கிர்தின் கூறுகையில், இதுவரையிலும் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளேன்.
குறிப்பாக, இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடந்த கூகுள் அறிவியல் கண்காட்சியில் கிர்தினுக்கு, அல்ஜீமர் நோயை முன்கூட்டியே கண்டறியும் முறையை கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘‘பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு இரண்டாம் இடம். 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. எந்த வயதுப் பெண்களுக்கும் இது வரலாம். வயது கூடக் கூட நோய் தாக்கும் அபாயமும் கூடும்.
எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய செல்கள் இருக்கும். ஆனால், அவை புற்றுநோயாக மாறாமலிருக்க, நமது உடலிலுள்ள பாதுகாப்புப் படை எந்நேரமும் ‘அலர்ட்’ ஆக இருந்து, அழித்துக்கொண்டே இருக்கும். புற்றுநோய் என்பது சாதாரண இன்ஃபெக்ஷன் மாதிரி திடீரென வெளியே வராது. உடலுக்குள் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால், புற்றுநோய் செல்களாக மாறும்.
ஒரு நல்ல குடும்பத்து மனிதர், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீவிரவாதியாக மாறுவதில்லையா? அப்படித்தான் நல்ல செல்கள், புற்றுநோய் செல்களாக மாறுவதும்! அதற்கு என்னவெல்லாம் காரணங்கள் தெரியுமா?
பரம்பரையாகத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வெறும் 5 முதல் 10 சதவிகிதம்!
இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவது, மிக தாமதமான மெனோபாஸ், அதாவது 55 வயதுக்குப் பிறகு… இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.
திருமணம் செய்யாமலிருப்பது.
30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பிரசவிப்பது. பூப்பெய்தியதில் இருந்து, 15 வருடங்களில், உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிக மாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் அபாயம் அதிகமாகும்.
வருடக்கணக்கில் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோயை வரவேற்கும் விஷயங்கள்.

More articles

Latest article