ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை கொன்றது அமெரிக்காவா ரஷ்யாவா 

Must read

சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் (தலைமை பிரசாரகர்) அபு முகமது அல் அட்டானி, கடந்த மாதம் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.  இதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும் ஒப்புக்கொண்டது.
அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில்தான் அட்டானி கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவித்தது.  இந்த நிலையில், ரஷ்யா, தங்களது படையின் தாக்குதலில்தான் அட்டானி கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

அபு முகமது அல் அட்டானி
அபு முகமது அல் அட்டானி

இந்த நிலையில், தற்போது, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர், “வடக்கு சிரியா பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களை, எங்களது அமெரிக்க வான்படை குறிவைத்துத் தாக்கியபோதுதான் அட்டானி கொல்லப்பட்டார்”  என்று தெரிவித்துள்ளார்.
உலகின் அதி பயங்கர தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரைக் கொன்றது யார் என்பதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டியிட்டுக்கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article