robot1
உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு கனமே இருந்த சவ்வுப்படலத்தை கண்ணில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
மிகவும் நுணுக்கமான இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவரின் கை நடுக்கங்ளைக் கூட அந்த ரோபோ வடிகட்டி தடுத்துவிடுகிறது.
மனித கைகளைவிட ரோபோவின் கைகள் மிகவும் துல்லியமாக செயல்பட்டதாக கூறுகிறார் இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவ பேராசிரியர் ராபர்ட் மெக்லாரன்.
வளர்ந்து வரும் நாடுகளில் விழித்திரையில் ஏற்படும் நோய்களே பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் இந்த இயந்திரக் கைகள் பலரின் பார்வையை காப்பாற்றலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.