galzxw
சாம்சங் நிறுவனம் இதுபோன்ற சோதனையைச் சந்தித்ததில்லை. விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் லிஸ்ட்டிட்டில் இப்போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலும் சேர்ந்திருக்கிறது. இந்த மொபைலை கொண்டுசெல்ல அமெரிக்க விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சன் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான  கேலக்ஸி நோட் 7 மொபைல்கள் ஆங்காங்கே தீப்பற்றி எரிவதையும் வெடிப்பதையும் பற்றிய செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறன.
அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு ஜீப்பில் வைக்கப்பட்டிருந்த கேலக்ஸி நோட் திடீரென பற்றி எரிந்து ஜீப்பையும் சேர்த்து காவு வாங்கியிருக்கிறது. நல்லவேளை அப்போது அந்த ஜீப்பில் யாரும் இல்லை.
அடுத்தடுத்த சம்பவங்களால் விழித்த்துக்கொண்ட விமான நிறுவனங்கள் கேலக்ஸி நோட் கொண்டுசெல்ல தடை விதித்துள்ளன. இந்த மொபைலை லக்கேஜில் வைத்துக்கூட எடுத்துச் செல்லக்கூடாது. கேலக்ஸி நோட் 7-க்கு முதலில் தடை விதித்தது ஆஸ்திரேலிய ஏர்லைன் நிறுவனங்களே.
இதையடுத்து அமெரிக்காவும் தனது விமானங்களில் இந்த மொபைல்களைக் கொண்டு செல்ல தடை விதித்திருக்கிறது.
இதற்கிடையே சாம்சங் நிறுவனம் இந்தக் கோளாறுக்கு காரணம் லித்தியம் பேட்டரிகளே என்று கண்டுபிடித்திருக்கிறது. அதிக நேரம் சார்ஜ் செய்வதாலும், அதிக உஷ்ணமடைவதாலும் லித்தியம் பேட்டரிகள் எளிதில் தீப்பற்றிக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.