டில்லி

டில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடந்த 21ம் தேதி இரவு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.மறுநாள் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னிறுத்தியபோது, அவர் 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது…

கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து டில்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி இன்று காலை பேரணியாகச் செல்வது என ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் இல்லம் நோக்கி செல்லக் கூடிய வழியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியில் இருந்து விலக கோரி டெல்லியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இருந்து டில்லி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்று ஆளுநரிடம் இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.