தமிழ்நாட்டில் அமித்ஷா 3நாள் சுற்றுப்பயணம்!

டில்லி,

பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியை பலப்படுத்த  இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக பாரதியஜனதா கூறி உள்ளது.

இந்த 95 நாட்கள் சுற்றுப்பயணத்தின் கடைசியாக பயணமாக அவர் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்த மாதம் 12ந்தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த அமித்ஷாவின் சுற்றுப்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் அவரது தமிழக வருகை குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் செப்டம்பர்மாதம்  26, 27, 28 தேதிகளில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.

நாடு முழுவதும் 95 நாள் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் கடைசியாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.


English Summary
BJP National leader Amit Shah 3 day tour in Tamil Nadu on September