ய்ஸ்வால்

பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மிசோரம் மாநில முதல்வர் பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர மறுப்பு தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.. இங்கு நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது  இங்கு சோரம் தங்கா முதல்வராக உள்ளார். அவருடைய மிசோ தேசிய முன்னணி கட்சி, பா.ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் இடம்பெற்று மத்தியில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.

அதே வேளையில் மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகின்றன.  , இம்மாதம் 30 ஆம் தேதி,பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் பிரதமர் மோடி மிசோரம் சென்று மமித் நகரில் பிரசாரம் செய்கிறார்.

முதல்வர் சோரம் தங்கா. லண்டன் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்

”காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் கட்சி முற்றிலும் எதிரானது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை. அதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், வடகிழக்கு ஜனநாயக கூட்டணியிலும் சேர்ந்தோம். 

மிசோரம் மாநில மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரைச் சேர்ந்த மெய்தி இன மக்கள், மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்களை எரித்தனர். அதனால் மிசோரம் மக்கள் கொந்தளிப்பாக உள்ளனர்.  இந்த நேரத்தில், பாஜகவுடன் அனுதாபம் கொள்வது எனது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகி விடும். 

ஆகவே, பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வரும்போது அவருடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன். அவர் தனியாக வந்து, தனியாகப் பிரசாரம் செய்வதுதான் நல்லது. அதுபோல், நானும் தனியாக பிரசாரம் செய்வேன்” 

என்று தெரிவித்துள்ளார்.