சென்னை: ஒரு புள்ளி கூட மாறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் என பேரவை சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக  இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இன்றைய கூட்டத்தில் . ஆளுநர் காரணம் சொல்லாமல்  பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையது அல்ல என்று சட்டமன்றம் கருதுவதாக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.  இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை பேரவை கூட்டம் தொடங்கியதும், வழக்கமான காலை நிகழ்வுகளுடன் மறைந்த தலைவர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு,  ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவில், ஒரு புள்ளி கூட மாறாமல்  அனைத்து சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட உள்ளது  என்றார்.

மேலும்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை என்றவர்,  இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார்.