பாட்னா: கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், பீகார் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி முதல்கட்டகமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பீகார் மாநிலத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,

50% வருகையுடன் அனைத்து கல்லூரி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  உயர்நிலை வகுப்பு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் மற்ற ஊழியர்களுக்கும் சிறப்பு தடுப்பூசி வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்களுடன் வேலைபார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

50% இருக்கையுடன் உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.