ந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள் குறித்த  ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது.  ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த சிசோம் (Chisholm ) நிறுவனத்தைச் சேர்ந்த  முனைவர் கண்மணி பார்த்தசாரதி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள இந்த கட்டுரையில்,  இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியா தாய்மார்கள், ஆஸ்திரேலியாவில் குறைபாடான பிரசவங்கள் ஆவதற்கான அதிகப்படியான விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவரது ஆய்வு, இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியா தாய்மார்களின் குறைபாடான பிரசவங்களுடன்  ஆஸ்திரேலியாவில் பிறந்த ஏனைய தாய்மார்களின் குறைபாடானபிரசவங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு , அதற்கான காரணங்களை விளக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2012 -ம் ஆண்டு நிகழ்ந்த அனைத்து பிரசவங்களையும் ஆய்வு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு வழிமுறை:

தேசிய மகப்பேறு தரவுகள் தொகுப்பில் ஒட்டுமொத்த தரவாக 312,215  மகப்பேறுகளும், அதில் ஆஸ்திரேலியாவில் பிறந்த தாய்மார்களின் மகப்பேறு 215,009  என்பதாகவும், 10,297  மகப்பேறுகள் இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியா தாய்மார்களாகவும், 86,945  மகப்பேறுகள் ஏனைய நாடுகளில் பிறந்த தாய்மார்களின் மகப்பேறுகளாகவும் தரவுகள் உள்ளன.

இந்த ஆய்வின் துணை தரவுகளாக Monash Health Birthing Outcomes System (BOS) 2014 மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் மூலம், பகுதி அளவிலான தரவுகளின் படி 3175 மகப்பேறுகளில், 1211 மகப்பேறுகள் ஆஸ்திரேலியாவில் பிறந்த தாய்மார்களின் மகப்பேறுகளாகவும், 393 மகப்பேறுகள் இந்தியாவில் பிறந்த தாய்மார்களின் மகப்பேறுகளாகவும், 1568 மகப்பேறுகள் ஏனைய நாடுகளில் பிறந்த தாய்மார்களின் மகப்பேறுகளாகவும் இருந்தது. தரவு தொகுப்புக்கள் விளக்க புள்ளிவிவரங்களின் படி பகுத்தாயப்பட்டது. இதற்கு சமூக அறிவியலின் புள்ளிவிவர தொகுப்பாக்கள் பயன்படுத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகள், சி- சதுர சோதனை மூலமாக அனுமான தரவுகளால் பகுத்தாயப்பட்டது. திணையியல் நிலையளவு உள்ள மற்றும் இல்லாத சோதனைகள், தொடர்ச்சி உள்ள மற்றும் தொடர்ச்சி அற்ற மாதிரிகள் மீது சோதிக்கப்பட்டது. எதிர்மறை வகையான விளைவு மாதிலிகள், தற்செயல் அட்டவணை மற்றும் குறுக்காக மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைகள் மூலமாக பகுத்தாயப்பட்டது.

ஆய்வு முடிவுகள்:

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்கள் சமூக பொருளாதார கட்டமைப்பின் ( SEIFA IRSD காடேகோரி) வகையின் படியாக  அடித்தட்டு நிலையில் அதிகமா உள்ளனர். அவர்கள் அரசாங்க மருத்துவமனைகளிலேயே பிரசவம் பார்க்க திட்டமிடுகிறார்கள். மேலும், தொடர்ச்சியாக பேறுகாலத்திற்கு முற்பட்ட , அரசால் வழங்கப்படும்  இலவச சோதனை மற்றும் மகப்பேறு ஆலோசனை நிகழ்வுகளுக்கு தவறாமல் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்கள், அதிகமானோர் செயற்கை தூண்டுதல் மூலமான பிரசவம், அவசர அறுவை சிகிச்சை மூலமான மகப்பேறு, மகப்பேறுக்கு குறித்தான கால அளவுக்கு முன்னான மகப்பேறு ( 20 முதல் 27 வாரங்கள்), குறைந்த மற்றும் மிக குறைந்த எடையிலான குழைந்தை பேறு, APGAR குறியீடு (௦ -2) ஐந்து நிமிடத்தில் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியா தாய்மார்கள் அதிகப்படியான மருத்துவ நிலைமைக்கு ( கர்ப்பகால சக்கரை நோய்,  தைராய்டு சுரப்பு குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ஊட்டச்சத்து B12 குறைபாடு) உள்ளாகிறார்கள். இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் மகப்பேறியியல் சிக்கலுக்கு உள்ளாவார்கள். பொதுவாக, இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்கள் குறித்த மகப்பேறு காலத்திற்கு முன்பாக பிரசவிக்கும் நிகழ்வு ஏனைய ஆஸ்திரேலிய தாய்மார்களை ஒப்பிடும்போது அறிய முடிகிறது. இவர்கள் (25 – 34 வயதிற்கு உட்பட்டவர்கள்), திருமணத்திற்கு பின்பான மகப்பேறு, புகை பிடிக்காதவர்கள், மற்றும் 30 க்கு  உள்ளான  உடல் நிறை குறியீடு எண் போன்றவை பொதுவாக சுகமான மகப்பேரிற்கு வழிவகுக்கும். இருப்பினும் இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்கள் வளர்ந்த நாடுகளில் சுகமான மகப்பேறிருக்கு தேவையான மிகவும் மருத்துவ பாதுகாப்பான காரணிகள் என்று அறியப்பட்ட காரணிகள் இருந்தும் மருத்துவ சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.

ஆய்வு தீர்வுகள்:

சுகமான மகப்பேறுக்கு எதிரான காரணிகள் என்று அறியப்பட்ட எந்த காரணிகளும் இல்லாத, இளம் ஆரோக்யமான இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்கள் குறைபாடானபிரசவத்திற்கு  உள்ளாகிறார்கள். இத்தனையும், ஆஸ்திரேலியாவின் மகப்பேறு பாதுகாப்பு வழிமுறைக்கு பின்பாகவும் உள்ளது. இந்த ஆய்வு பரிந்துரை களில், ஒரு இடைநிலை ஆய்வு ஒன்று  மத்திய மற்றும் முதுநிலை கர்ப்பகால மகப்பேறு சிக்கல்கள் மூலமாக குறைபாடானபிரசவம் மற்றும் குறைந்த எடை குழைந்தைகள் பிறப்பிற்கான காரணிகள் குறித்தானதாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இது, தாய் மற்றும் சேய் நலன் மற்றும் பாதுகாப்பை பெரிதும் பேணும் ஆஸ்திரேலியா மகப்பேறு சேவை மற்றும் மகப்பேறு நலன் காக்கும் நிபுணர்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது. பெரிதும் பரவலாக அறியப்பட்ட குறைபாடான பிரசவங்களுக்கான காரணமான முப்பத்தைந்து வயதிற்கு மேலான தாய்மார்கள், பதினெட்டு வயதிற்கு குறைவான தாய்மார்கள், மது மற்றும் போதை பொருள் பயன்பாட்டாளர்கள், புகை பிடிப்பவர்கள், உடல் எடை பருமனானவர்கள், தம்பதி அல்லாத தனி தாய்மார்கள் ஆகியோரின் குறைபாடானபிரசவங்கள்  இந்த ஆய்வில்  கருத்தில் கொள்ள படவில்லை.

கட்டுரையாளர்:  முனைவர் கண்மணி பார்த்தசாரதி பயிற்சியாளர் மற்றும் மதிப்பீட்டாளர், சிசோம் (Chisholm )  நிறுவனம், மெல்பேர்ன்  ஆஸ்திரேலியா

மொழிபெயர்ப்பாளர்:  ராஜ்குமார் மாதவன்