சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்….

Must read

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர்தேவஸ்வி யாதவ்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 33 கட்சித் தலைவர்களுக்கு  அவசர கடிதம் எழுதி உள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு தொடர்ந்த வழக்கில், மத்தியஅரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியாது என்று தெரிவித்து பிரம்மானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில்,  கொரோனா பேரிடரால் ல் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனதாலும், தற்போதைய சூழ்நிலையில்,  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு உச்சநீதிமன்றம் இனி உத்தரவிட்டால் அது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுப்பது மட்டுமின்றி நிர்வாக ரீதியாகவும் சிக்கலை உருவாக்கும் என்று தெரிவித்து உள்ளது.

இது பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. மத்தியஅரசின் முடிவை பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டிருந்தார். அதில்,  “மக்கள் தொகை கணக்கெடுப்பில், பாம்புகள்-தேள், கிளிகள், யானைகள்-குதிரைகள், நாய்கள்-பூனைகள், பன்றிகள்-ஓநாய்கள் போன்றவை பிற பறவைகள்-விலங்குகள்-தாவரங்களுடன் கணக்கிடப்படும், ஆனால் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவை அல்ல.  பிற்படுத்தப்பட்டவர்கள் மீது வெறுப்பு கொள்கிறது பாஜக என்று விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை ஒன்றுதிரண்டும் வகையில், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்.ஜே.டி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட 33 கட்சித்தலைவர்களுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தும், பாஜக அரசுக்கு எதிரான அவைரும் கைகோர்க்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

கூட்டணியில் சலசலப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக அரசின் அறிவிப்புக்கு ஜேடியு உள்பட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு…

More articles

Latest article