சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் 750இடத்தை பிடித்து கோவைiயச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்  ரஞ்சித் சாதனை படைத்துள்ளார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎசி நடத்தி வருகிறத.இந்த தேர்வின் மூலமாக மட்டுமே இந்திய ஆட்சி பணியின் உயர் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் . கடந்த 2020ம் ஆண்டு  நடைபெற்ற ஆட்சி பணிகளுக்கான  யுபிஎஸ்சி (ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ்) தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வுமுடிவுகள் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. தேர்வு அல்லது முடிவுகள் குறித்து ஏதேனும் தகவல் அல்லது தெளிவு பெறலாம். விண்ணப்பதாரர்கள் டெல்லி பின்கோடுடன் 23385271, 23381125 மற்றும் 23098543 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தேர்வில்,  பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜக்ராதி அவஸ்தி என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அங்கிதா ஜெயின் 3வது இடத்தை கைப்பறியுள்ளார்

வெற்றி பெற்ற 761 பேரில் 263 பொது அல்லது ஓபன் கோட்டாவில் வென்றவர்கள் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினர் ( EWS) 86 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (obc) 229 பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 122 பேர், எஸ்டி பிரிவில் இருந்து 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இநத நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்ற 761 பேரில், தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்  ரஞ்சித்  750இடத்தை பிடித்து  சாதனையை  படைத்துள்ளார். மாணவர் ரஞ்சித், பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி மாணவர். அவரது தாயார் வாசிப்பதை வைத்தே அவர் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். முதன்முதலாக அவர் யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட நிலையில், அதிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மாணவர் ரஞ்சித்துக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  UPSC தேர்வில் சாதித்துள்ள பேச்சு & கேட்கும் திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர் கோவை ரஞ்சித்திற்கு என் பாராட்டுகள். கடின உழைப்பு – தன்னம்பிக்கை – இலக்கில் தெளிவு இருந்தால் வெற்றி நிச்சயமென உணர்த்திய ரஞ்சித்தின் பணிகள் சிறக்கட்டும். வாழ்த்துகள். என கூறியுள்ளார்.