புதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்?

Must read

நெட்டிசன்
பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு

தாமரைக்கண்ணன் – ரவி

நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது.
பின்னர், ஆவடி மற்றும் தாம்பரம் ஆகியன, தனி மாநகராட்சி அந்தஸ்து பெற்றதாக ஆணை வெளியானது.
தாம்பரம் (ம) ஆவடிக்கு ஆட்சியர் நியமனமும், காவல் ஆணையர்கள் நியமனமும் இதன் தொடர்ச்சியாக நியமிக்கப் படவேண்டும்.
ஆவடி மாநகர காவல் ஆணையராக தாமரைக் கண்ணன், தாம்பரம் காவல் ஆணையராக மு.ரவி ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
சென்னை பெருநகர காவல் ஆணையராக இருக்கும் கூடுதல் டிஜிபி சங்கர்ஜிவால், நேற்று டிஜிபி தகுதிக்கு பணி மூப்பில் பதவி உயர்வு பெற்றதால் அவர் ஆணையர் பொறுப்பில் தொடர்வது சந்தேகம் தான்!
(முகநூலில் : ந.பா.சேதுராமன் -25.09.2021)

More articles

Latest article