Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

மோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி! கே.எஸ்.அழகிரி

Oct 24, 2020

சென்னை: 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதீஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. எடுக்காததால் கடும் விளைவுகளையும், உயிரிழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சம், பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மறுபக்கம் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள் நாள்தோறும் போராடி வருகிறார்கள்.
தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடி மார்ச் 25 அன்று வாரணாசியில் பேசும் போது, பாரதப் போர் 14 நாள்களில் முடிந்தது. ஆனால், கொரோனா ஒழிப்பு போர் 21 நாள்களில் முடியும் என்று பகிரங்கமாகக் கூறினார். ஆனால், 7 மாதங்கள் உருண்டோடியதே தவிர, கொரோனா ஒழிப்பு போர் கடும் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி அரசின் தவறான அணுகுமுறை தான் காரணம். இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வேலையில்லா திண்டாட்டம் பெருகி, வாழ்வாதாரத்திற்காக மக்கள் தவித்து வருகிறார்கள்.
2017 ஆம் ஆண்டில் உலக அளவில் வறுமையில் வாடிய 68.9 கோடி மக்களில் 13.9 கோடி பேர் இந்தியர்கள். இந்தியர்களில் 5 பேரில் ஒருவர் இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று 2019 ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட வறுமை ஒழிப்பு அறிக்கை கூறுகிறது. வளம் மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவேன் என்று கூறிய மோடி ஆட்சியில் வறுமை தான் வளர்ந்திருக்கிறது.
இதையெல்லாம் மூடி மறைக்கிற வகையில், கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்ததின் மூலம் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு, சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் 2020 ம் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான ஆசிய நாடுகளின் பங்களிப்பை 2 ட்வீட்களில் சுட்டிக்காட்டியிருந்தார். கவுசிக் பாசு சுட்டிக்காட்டியபடி, ஆசியாவிலேயே இந்தியாவில் தான் கொரோனா உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. அதேசமயம், ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியிலும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் 10 லட்சம் பேரில் 83 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், சீனாவில் 3 பேரும், வங்கதேசத்தில் 34 பேரும், வியட்நாமில் 0.4 பேரும். நேபாளத்தில் 25 பேரும், பாகிஸ்தானில் 30 பேரும் தாய்லாந்தில் 0.8 பேரும், இலங்கையில் 0.6 பேரும், மலேசியாவில் 6 பேரும், இந்தோனேசியாவில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவை விட, இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் இரு மடங்கு அதிகமாக நடந்துள்ளன.
2020-21 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியில் இந்தியா மைனஸ் 10 சதவீதமாகச் சுருங்கியிருக்கிறது. சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளில் ஜிடிபி வளர்ச்சி குறிப்பிடும்படி உள்ளது. சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் தரவுகளின்படி, ஜிடிபி விகிதம் 3.8 சதவீதத்தை எட்டி வங்கதேசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு 10 சதவீதம் சுருங்கியதால், இந்தியாவை பின் தள்ளிவிட்டு வங்கதேசம் முன்னேறியுள்ளது.
சமூக மற்றும் அரசியல் காரணங்களும் பொருளாதார பாதிப்புக்குக் காரணம். சமூக நல்லிணக்கம் குறைந்ததும், சமூகத்தில் அடையாளப்படுத்தி நடத்தப்படும் பிரிவினையும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன’ என்றார்.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, ‘சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கெடுப்பு அதிகரித்துள்ளது. கொரோனோ காலத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கெடுப்பும் இருந்ததால், பெரும்பாலான ஆசிய நாடுகள் எதிர்மறை பாதிப்பிலிருந்து விடுபட்டு, அந்த நாடுகளின் வளர்ச்சி 38 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஆடை தயாரிப்பில் பெண் தொழிலாளர்களை வங்கதேசம் அதிக அளவில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் 2017-18 ஆண்டு சர்வேயின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட 17 சதவீத இந்தியப் பெண்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் அரசியல் நடவடிக்கை அதிகம் உள்ள இந்தி பேசும் பெரும்பாலான மாநிலங்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்துக்குள் உள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், சாதி, வகுப்புவாதம் மற்றும் பாலின பாகுபாடு எந்த அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது என்பதற்கான போதுமான ஆய்வுகள் இதுவரை இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா பரவல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தை 2025 ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளம் மிக்க நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று உரத்த குரலில் பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய இந்தியாவில் எதிர்மறை வளர்ச்சியின் காரணமாக மோடியின் கனவு பகல் கனவாகவே அமையப் போகிறது. இது குறித்து கருத்துக்களை வெளியிட்ட தர நிர்ணய அமைப்புகள், 2025 ஆம் ஆண்டில் அந்த இலக்கை அடையமுடியாத நிலையில். 2027 இல் அந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் 500 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவை என்று கூறியிருக்கிறது.
கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கியிருக்கிற மத்திய பா.ஜ.க. அரசு அத்தகைய முதலீடுகளைச் செய்வதற்கு எத்தகைய நிதி ஆதாரங்களும் இல்லை. தற்போது 2019 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9 டிரில்லியன் டாலராகத்தான் இருக்கிறது. கடுமையான ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மிகக் குறைவாக 24 சதவிகிதம் சுருங்கியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர்ச்சியில் பின் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய மக்களை குறைந்த பட்சம் வறுமையின் பிடியிலிருந்து மீட்க முடியாத நிலையில் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள். அதே போல, 2024 இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது. நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் ஈடுபாடுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகிற வகையில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post navigation

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்
ஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து

Related Post

தமிழ் நாடு

எழும்பூரில் 6 விரைவு ரயில்கள் சேவை மாற்றம்

தமிழ் நாடு

யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவருக்கு பாமக கண்டனம்

தமிழ் நாடு

குழந்தைகளை பணிக்கு அனுப்பினாலும் பணி அளித்தாலும் 2ஆண்டு சிறை

உலகம்

இந்தியா உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் எதிரொலி இந்தியாவில் விமான சேவை பாதிப்பு!

June 13, 2025 A.T.S Pandian
இந்தியா உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்… ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

June 13, 2025 Sundar
இந்தியா உலகம்

தாய்லாந்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

June 13, 2025 Sundar
இந்தியா உலகம்

241 பேரை பலி கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்! டாடா

June 13, 2025 A.T.S Pandian
videos இந்தியா உலகம் வீடியோ

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறுநிமிடமே விழுந்து நொறுங்கிய விமானம்… சிசிடிவி காட்சி வெளியானது…

June 12, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer