திருச்சி: பிரபல தமிழ் நடிகை ஓவியா திறந்து வைத்த  நகைக் கடையில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில்,  உரிமையாளர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி   நகை வியாபாரத்தில், 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், கடை உரிமையாளர், மனைவி, மகள், பெற்றோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் நகைக் கடை வியாபாரி குடும்பத்துடன் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்றவர்கள், திருச்சி அருகே நகைக்கடை வைத்துள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் மகன் பலராமன். தாராபுரம் பகுதியில் பிரபல நகை கடை, பைனான்ஸ, தானியமண்டி ஆகியவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகை கடையினை மகன் ஹரி நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு தாராபுரம் பெரியகடை வீதியில், எஸ்.வி.ஆர். என்ற பெயரில் நகைக்கடையும் உள்ளது.

இந்த நகை கடையினை நடிகை  ஓவியா கடந்த ஆண்டு திறந்து வைத்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக திறக்கப்பட்ட நகைக்கடையில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. நகை விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால் சுமார் ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நஷ்டத்தை ஈடுகட்ட நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தினை திரும்ப கேட்டுள்ளனர். நகைச்சீட்டு கட்டியவர்களுக்கு, நகை கொடுக்க முடியாமல் திணறினர்.  பணத்தினை திருப்பி கொடுக்க முடியாததால், கடந்த ஒரு வாரமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.  இதையறிந்த சீட்டு கட்டி ஏமாந்த மக்கள், கடந்த, 18ம் தேதி இரவு, கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவர்கள் குடும்பத்தோடு, திருச்சி லால்குடியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளனர். பின்னர்,  அன்று இரவே தாராபுரம் வீட்டிற்கு செல்வதாக கூறி மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள ஓட்டலில் ஒரே அறையில் தாய், தந்தை, மகன், மருமகள், பேத்தி உள்ளிட்ட 5 பேரும் தங்கியுள்ளனர்.

மற்றொரு அறையில் கார் ஓட்டுநர் அய்யப்பன் தங்கியுள்ளார். அவர்கள் குடும்பத்தோடு சயனைடு விஷம் குடித்துள்ளனர். தாங்கள் விஷம் குடித்து விட்டதாக,   ஓட்டுநரிடம்  பலராமன் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநகர், ஓட்டல் ஊழியர்கள உதவியுடன் அனைவரையும் மீட்டு,  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதில் 75 வயதான பலராமன் அவரது மனைவி புஷ்பா ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் பலராமன் மகன் ஹரி (38), இவரது மனைவி திவ்யா இவர்களது மகள் 8 வயதான அசோக் ராதா ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.