டெல்லி: கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து கோவாக்சின் என்ற தருப்பூசியை உருவாக்கி உள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியுடன் இந்த கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

2 மற்றும் 3ம் கட்ட சோதனைகளை ஒன்றாக சேர்த்து நடத்திருந்தால் கோவாக்சின் திறன் நிரூபிக்கப்பட்டு இருக்கும். இன்னும் 2 வாரங்களில் தடுப்பூசி பற்றிய செயல்திறன் தரவுகளுடன் வர உள்ளோம்.

கோவாக்சின் உற்பத்தித் திறனை மாதத்திற்கு 40 மில்லியன் டோஸாக உயர்த்தும் பணியில்  ஈடுபட்டுள்ளோம். தென்னாப்பிரிக்கா மரபணு மாற்ற வைரசையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது என்று கூறினார்.