டெல்லி: முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்து உள்ளது.  அதன்படி இன்று பிற்பகல் 3 மணி முதல்   மார்ச் 15ம் தேதி இரவு 11.55 வரை வரும் விண்ணபங்களை  சமர்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு விண்ணப்பதாரர்கள்  என்.பி.இ.யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை nbe.edu.in  பார்வையிடலாம் என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப்படிப்பான  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.  வரும் 2021 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2021 நீட் தேர்வுக்கு இன்று மதியம் 3 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரங்கள்  https://nbe.edu.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவபடிப்பான , MD/MS மற்றும் PG Diploma படிப்புகளில் சேர விரும்பும்  இளநிலை மருத்துவம்  படித்தவர்கள், NEET PG 2021 க்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நீட் தேர்வு நாடு முழுவதும்  நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

நீட் பிஜி 2021 தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) வடிவத்தில் நடைபெறும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் நீட் பிஜி 2021: மார்ச் 15, 2021

நீட் பிஜி 2021 தேர்வு தேதி: ஏப்ரல் 18

நீட் பிஜி 2021 முடிவு: மே 31 க்குள் வெளியிடப்படும்.

NEET PG 2021 கல்வி தகுதி

நீட் பிஜி 2021 க்கு தகுதி பெற, அவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டம் (தற்காலிக அல்லது நிரந்தர) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எம்.சி.ஐ அல்லது மாநில மருத்துவ கவுன்சில் வழங்கிய இதே போன்ற பதிவு சான்றிதழையும் கொண்டிருக்க வேண்டும். நீட் பிஜி 2021 ஆர்வலர்கள் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் ஒரு வருட இன்டர்ன்ஷிப்பை முடித்திருக்க வேண்டும்.

நுழைவு கட்டணத்தை எஸ்சி,எஸ் எஸ்டி பிரிவினருக்கு 2750 ரூபாயிலிருந்து 3835 ரூபாய் அதாவது 1085 ரூபாயும், பொது பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 3750 ரூபாயிலிருந்து 5015 ரூபாய் அதாவது ஒரு மாணவருக்கு 1265 ரூபாய் தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தியுள்ளது/

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) என்பது நாட்டில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை மருத்துவ படிப்புகள் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் படிப்புகள் (பி.டி.எஸ்) படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வாகும்.

தேசிய பரீட்சை வாரியம் (என்.பி.இ) என்பது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (இந்தியா) கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாகும், மேலும் 1975 ஆம் ஆண்டில் தில்லி சொசைட்டி பதிவு சட்டத்தின் கீழ் ஒரு சமூகமாக இந்தியாவில் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் தேர்வை தரப்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.