டில்லி

ந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

இங்கிலாந்து தலைநகர் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஊடக சேவை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டது. அதில் 2002 குஜராத் கலவரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் உட்பட முஸ்லீம்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பிபிசி பதிவு செய்தது.

மத்திய அரசு இந்த ஆவணப்படத்துக்குத் தடை விதித்தது.  இந்த ஆவணப்படம் வெளியான சில நாட்களில், பிபிசி நிறுவனத்தின் டில்லி மற்        றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. வருமான வரித் துறை அதிகாரிகள் பிபிசி ஊழியர்களிடம் 60 மணிநேரம் கேள்விகள் எழுப்பினர்.

அப்போது இந்தியாவில் பிபிசி ஈட்டும் வருவாய்க்கான வரியை முறையாகச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும்

“பிபிசியின் வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த அதன் பிற இந்திய மொழி வருவாய் விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. பிபிசி அதன் வருவாய் கணக்கிட்டதில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று தெரிகிறது” எனக் கூறப்பட்டது.  எதிர்க்கட்சிகள் மோடி குறித்து ஆவணப்படம் வெளியானதையொட்டி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாகச் சோதனையை ஏ யுள்ளதாக மத்திய அரசை விமர்சித்தன..

தற்போது பிபிசி வரியைக் குறைத்துச் செலுத்தியது உறுதியாகி இருக்கிறது.என மத்திய வருமான வரித் துறை வட்டாரம் கூறி உள்ளன. மேலும்.” பிபிசி வரியை குறைத்து செலுத்தியதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. ஆயினு, இன்னும் மீதம் செலுத்த வேண்டிய வரித் தொகையை பிபிசி செலுத்தவில்லை” என்றும் தெரிவித்துள்ளது.