மும்பை: இந்திய பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிடம் சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவானார் பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா. அவர் இங்கிலாந்தில்  குடியுரிமை பெற்று வசித்து வருகிறார் அங்கு அவரை இங்கிலாந்து அரசு கைது செய்தது. தற்போது,  ஜாமின் பெற்று இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வந்த விசாரணையை அடுத்து, அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், விஜய்மல்லையா  9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாடு தப்பி சென்றுவிங்டட  எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த நீதிமன்றம் பிறப்பித்த இருவேறு உத்தரவுகளில் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகளிடம் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு தனித்தனி உத்தரவுகளில், எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு சிறப்பு பணமதிப்பிழப்பு தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விஜய்மல்லையா பொய்னான கணக்குகள் மூலம் நிதிமுறைகேடு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது.

அதன்படி, மே 24 ம் தேதி உத்தரவு மூலம் நீதிமன்றம் சுமார் 4,233 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வசப்படுத்தவும்,  1,411 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான வழக்கிலும் விஜய்மல்லையாவின் சொந்ததுக்களை கைப்பற்ற உத்தரவிட்டது.

இரண்டு உத்தரவுகளிலும் சேர்த்து, 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகளிடம் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த சொத்து முடக்கத்தில்  பெங்களுருவில் உள்ள 564 கோடி ரூபாய் மதிப்பிலான கிங் பிஸ்ஸர் டவர், 713 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி கட்டடம் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றோடு வங்கி முதலீடுகள் மற்றும் பங்குகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.