களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் சற்குணம் இரண்டாவது முறையாக அதரவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சண்டிவீரன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்களுடன் நடிகை ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ் ஜெயப்பிரகாஷ் ,சிங்கம்புலி, மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
லைக்கா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிகர் அதர்வா ராஜ்கிரணின் பேரனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.