சென்னை: தென்மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில்  இளையராஜாவின் பாட்டை அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்திற்காக நஷ்டஈடு கேட்டு இளையராஜா தரப்பில்  நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்  தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது மஞ்சும்மல் பாய்ஸ் படம். மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இந்தப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.

இந்த படமானது ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா திரைப்டத்தில் இடம்பெற்ற  குணா குகையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. குணா படத்தில் இளையராஜா இசையமைத்த கண்மணி அன்போடு காதலன் என்ற பாடம் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வரிகளை மஞ்சுமல் பாய்ஸ் படத்திலும் பயன்படுத்தி இருந்தனர்.

இதை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இளைஞானி இளையராஜா தரப்பில் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்… பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு நோட்டீஸ் விடுத்துள்ளார்.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்.23 ஆம் தேதி திரையரங்களில் வெளியானது. பறவா பிலிம்ஸ் சார்பில் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் இப்படத்தை தயாரித்தனர். சௌபின் சாகிர், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம், உலகம் முழுவதும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளத்தை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. பிரேமம் பட வசூலை பின்னுக்குத்தள்ளி இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை இப்படம் படைத்தது. இப்படத்தில் கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் குணா படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பிரபலமான காதல் பாடல். அதனை மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு! இந்நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய இசையமைப்பில் உருவான பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு நோட்டீஸ் விடுத்துள்ளார். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், தவறினால், பதிப்புரிமையை மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது! ஐஐடி நிகழ்ச்சியில் இளையராஜா