பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வெப்ப வாதத்தால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நடிகர் ஷாருக்கான் கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ப்ளே ஆப் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று விளையாடிய நிலையில் போட்டி முடிந்து விடுதிக்கு திரும்பிய ஷாருக்கானுக்கு இன்று காலை உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து இன்று பிற்பகல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு வெப்ப வாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.