சென்னை

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வயதானதற்காக விளையாட்டு போட்டிகளில் யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருண்டு வெளியேறிய போதும் அந்த அணி குறிட்தும் அணியின் வீரர் தோணி குறித்தும் பலவிதமாக பேசப்பட்டு வாருகின்ன்றன.  குறிப்பாக தோனியின் ஓய்வு மற்றும் சென்னை அணியின்நிலை ஆகியவை பற்றி மிகவும் பேசப்படுகின்றன.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த தோனி செய்தியாளர்களிடம்,

ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை என்றாலும் என்னை முழு உடற்தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். , உடற்தகுதியுடன் இருக்கக்கூடிய இளம்வீரர்களுடன் நான் போட்டிபோட வேண்டும்.  மேலும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள்.

தொழில் முறை விளையாட்டு போட்டிகள் என்பது எளிதானதல்ல. உங்களுக்கு வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள்.

நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், மற்ற வீரர்களைப்போல நீங்களும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால், வயது உங்களுக்கு அந்த கருணையை வழங்காது. எனவே நாம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்

என்று தெரிவித்துள்ளார்.