ஜெர்சியை முகர்ந்து பார்த்து கண்டுபிடித்த அஸ்வின் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரை கலாய்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின் “சைஸ் பார்த்து தேடியெடுத்து குத்தமா ?” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஞாயிறன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடுவதற்காக ரோஹித் சர்மா மற்றும் கிரேக் இர்வின் இருவரும் களத்தில் நின்று கொண்டிருந்த போது தூரத்தில் அவர்கள் பின்னால் இருந்த அஸ்வினை ஜூம் செய்து காட்டியது கேமரா.

அங்கிருந்த இரண்டு ஜெர்சியில் எது தனது என்று தெரியாமல் குழம்பிய அஸ்வின் கடைசியாக அந்த இரண்டு ஜெரிசியையும் முகர்ந்து பார்த்து அதில் ஒன்றை அங்கேயே போட்டுவிட்டு அவருடையதை எடுத்துச் சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து :

சைஸ் வெவ்வேறாக இருக்கிறதா என்று பார்த்தேன் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஏதாவது குறியீடு இருக்கிறதா என்று பார்த்தேன் அதுவும் இல்லை.

அதன் பிறகு தான் நான் பயன்படுத்தும் பெர்ப்யூம் வாசனையை வைத்து கண்டுபிடித்தேன்.

அடேய் கேமராமேன் என்று அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

ஜெர்சியை மோப்பம் பிடித்து கண்டுபிடித்த அஸ்வின் – மீம்ஸ்களால் கலாய்த்த ரசிகர்கள்