2024 ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேவேளையில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமானப் பணி துவங்குவதற்கு முன் இங்கிருந்த கலை மற்றும் பழங்காலப் பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள், தூண்கள், கலசம் மற்றும் உடைந்த நிலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் “ராம கதை அருங்காட்சியகம்” அமைக்கப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் ராம கதை அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையிடம் வழங்க உ.பி. அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாக உள்ளதை அடுத்து ராமர் கோயில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களின் படங்களை அந்த அறக்கட்டளை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.