தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

Must read

புதுடெல்லி:
மிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின. இதனையடுத்து சேதங்களை பார்வையிட ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு குழு ஒன்றை அனுப்பி வைத்தது. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து நேரில் பார்வையிட்டார். கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் சந்தித்தார். அதில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில் ட்வுதே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 1,133.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாஸ் புயல் பாதிப்பிற்கு உள்ளான மேற்கு வங்கத்திற்கு 586.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர தென்மேற்கு பருவ மழையில் பாதிப்பு அடைந்த அசாம் மாநிலத்திற்கு 51.53 கோடி ரூபாய், கர்நாடகா மாநிலத்திற்கு 504.06 கோடி ரூபாய் ,மத்திய பிரதேசத்திற்கு 600.50 கோடி ரூபாயும், உத்தராகண்டிற்கு 187.18 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை பற்றி இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை . மேலும் தற்போது வரை முதற்கட்டமாகவும் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

More articles

Latest article