திருப்பதி

டந்த 2021 ஆம் ஆண்டு திருப்பதி கோவிலில் 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாகத் திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனவே ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுக் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதியில் வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசிப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களில் மட்டும் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி தேவஸ்தானம்

”திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை 1.04 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  பக்தர்கள் உண்டியலில் தங்கள் வேண்டுதலுக்கேற்ப செலுத்திய காணிக்கையின் மூலம் ரூ.833.41 கோடி கிடைத்தது.

கடந்த வருடம் 48.75 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர்.  கடந்த வருடம் 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது”

எனத் தெரிவித்துள்ளது.