ஈரோடு:
ரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பெருமாள்மலை சேனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர். இவரது மனைவி மல்லிகா(55). மகள் தீபா(30). இவர்களது தோட்டத்தில் பணிபுரிந்தவர் குப்பம்மாள் (60). இந்த நிலையில், நேறறு காலை கருப்பண கவுண்டரின் வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, 4 பேருக்கும் கருப்பு நிறத்திலான மாத்திரை கொடுத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிக்சைக்காக கொண்டு சென்றனர். மல்லிகா வழியிலேயே பரிதாபமாக உயிரிழநதார்.

இதனையடுத்து, குப்பம்மாள் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், கருப்பண கவுண்டர், தீபா ஆகியோர் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், குப்பம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து,சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.