சென்னை:
ந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்குப் பட்டாக்கள் மற்றும் வீட்டுவசதிக்கு நிலம் வழங்கப்பட்டது. இந்த பட்டாக்களைத் திருப்பணி வருவாய் அலுவலர் எம் சத்யா வழங்கினார்.

இதுகுறித்து பேசிய திருவள்ளூர் மாவட்ட பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் எம்.தமிழரசன், இருளர் குடும்பங்கள், டி புதுர் கிராமத்தில் வசித்து வந்தனர். இப்போது அருகிலுள்ள பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு மாறிவிட்டனர் என்றும், இங்குள்ள வருவாய் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், அவர்களுக்குப் பல ஆண்டுகளாக அடிப்படை சுகாதார வசதிகள் அல்லது மின்சாரம் வழங்கப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.

கால்நடை வளர்ப்பு, தினசரி கூலி வேலைகள் மற்றும் வீட்டு வேலைகளில் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், ஏரி கலவாய் அருகே வசித்து வந்த அவர்கள் வர்தா சூறாவளியின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி இல்லை, என்றும் தெரிவித்தார்,

ஆனால், 2020 ஆண்டில், பதவியேற்ற ஆர்.டி.ஓ சத்யா, இந்த மக்களின் அவல நிலையைக் கவனித்து, விரைவில் பட்டாக்கள் தருவதாக உறுதியளித்தார்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ சத்யா தெரிவிக்கையில், நான் அவர்களுக்குப் பட்டாக்களை வழங்குவதாக உறுதியளித்தேன், இப்போது அவற்றை முதல் தொகுப்பில் உள்ள 20 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் சில குடும்பங்கள் பட்டியலில் உள்ளன. பட்டாபிராமபுரத்தில் அவர்களின் புதிய வீட்டுவசதி அவர்கள் முன்பு வாழ்ந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளது, எனவே அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்தும், அவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதையும் நாங்கள் ஆராய்வோம்,” என்று ஆர்.டி.ஓ சத்யா கூறினார்.