கோவை

நாடாலுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி இன்னும் 2 நாட்களில் முழுமையாக முடிவடையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

நேற்று மாலை கோவை சாய்பாபா கோவில் சந்திப்பில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் (ரோடு ஷோ) வாகன அணிவகுப்பு நடந்தது. இந்த வாகன அணிவகுப்பு நிறைவு செய்யும் பகுதியை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம்,

”ஆரம்பத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. ஆயினும் நீதிமன்ற உத்தரவினால் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி கோவை மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட வருகை தந்துள்ளார். 

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம். அனைவருக்கும் சேர்த்துத்தான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துகிறார். 

இன்னும் 2நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முழுமையாக முடிவாகி விடும்.  தற்போது தான் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா குறித்த செய்திகள் வந்து உள்ளது. , தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்”

என்று தெரிவித்துள்ளார்.