அமராவதி: ஆந்திர மாநிலத்தில், சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான கோவிகல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில், விஜயவாடாவில் 9 கோயில் களை புனரமைக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டினார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சந்திரபாயு நாயுடு கால ஆட்சியின்போது, தெலுங்குதேச அரசாங்கத்தால், கடந்த 2016ம் ஆண்டு சாலை விரிவாக்கப்பணிக்காக பல கோவில்கள் இடிக்கப்பட்டன. கிருஷ்ண புஷ்கரலு நதி விழாவின் போதுஇ நகரத்திற்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், சாலைகள் அகலப்படுத்தும்போது, கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், விஜயவாடாவிலும் 30க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில்களை மீண்டும் புணரமைக்க வேண்டும் என பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், ஜெகன்மோகன் அரசு, கோவில்கள் புணரமைக்காக 29 கோவில்களை கடந்தஆண்டு கண்டறிந்தது. அதில், 9 கோவில்களின் புணரமைப்புக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
சமீப காலமாக ஆந்திராவில், இந்துக்கோவில்கள் தாக்கப்படுவதும், சிலைகள் நொறுக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முதல்வர் ஜெகன்மோகன், அரசியல் நோக்கங்களுடன் கோவில்கள் மற்றும் சிலைகள் தாக்கப்படுகின்றன என்றும், ஒரு புதிய வகையான அரசியல் கொரில்லா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கங்களுடன் நள்ளிரவில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் கோவில்களும், சிலைகளும் தாக்கப்படுகின்றன. சிலைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன என தெரிவித்து, அதை தடுத்து நிறுத்தப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது 9 கோவில்கள் புணரமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.