புவனேஸ்வர்

ரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்படுத்தலை முன்னிட்டு நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன.   அனைத்து மாநிலங்களிலும் பள்ளி இறுதி மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளுக்காக ஒரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதற்காகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   சமூக இடைவெளியைப் பின்பற்றி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு சுமார் 100 நாட்கள் வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்குள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சானிடைசர் பயன்பாடும் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஒரு வகுப்பில் 20-25 மாணவர்களுக்கு மேல் அனுமதி வழங்கப்படவில்லை.  வகுப்புக்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும் நடை பெற உள்ளன.  பாடத்திட்டத்தில் 30% குறைக்கப்பட்டுள்ளன.