மத்திய பிரதேச ஆளுனராக ஆனந்திபென் பதவி ஏற்பு

Must read

போபால்

டந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய மத்தியப் பிரதேச மாநில ஆளுனராக இருந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக்காலம் முடிவடைந்தது.   அதன் பின் குஜராத் ஆளுநர் கோலி மத்தியபிரதேச ஆளுனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.    கடந்த வெள்ளிக்கிழமை அன்று குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலை ம பி மாநில ஆளுநராக நியமித்து ஜனாதிபதி மாளிகை தகவல் அளித்தது.

அதையொட்டி இன்று மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் ஆனந்தி பென் படேல் ஆளுனராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆளுனராக பதவி ஏற்றுள்ள ஆனந்தி பென் படேல் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் ஆவார்.   76 வயதாகும் ஆனந்தி பென் படேல் கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்றதால் குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

More articles

Latest article