கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கபில்தேவ் சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு குறித்து கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கபில்தேவுடன் பணிபுரிவது எனக்கான கெளரவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடித்துவரும் நிலையில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கெட்டப்பில் ரஜினிகாந்த்துடன் கபில்தேவ் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் ரஜினி பகிர்ந்துள்ளார்.