சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா அமைந்தகரை பிளாட்பாரம் முதல் அமெரிக்காவின் சைடு வாக் வரை அனைவரும் சொல்லும் பெயர் ரஜினிகாந்த்.

72 வயதிலும் தனது ஸ்டைலால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்தை காண பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை காத்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயிலர் படத்திலும் லால் சலாம் படத்திலும் நடித்து வரும் இவர் சென்னைக்கும் மும்பைக்குமாக பயணம் செய்து வருகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண வந்த கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர் கபில்தேவ் சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்ததார்.

1983 ம் ஆண்டு உலக கோப்பையை வென்று உலக நாடுகளையே இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கபில்தேவ், ரஜினியை நான் சந்தித்தது எனக்குக் கிடைத்த கெளரவம் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.